Categories: Health

கூந்தலுக்கு ஆரோக்கியத்தை அள்ளித்தரும் கற்றாழை !

கற்றாழை தலையை ஈரப்பதமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் தலையில் இருக்கும் சிறு புண்களை ஆற்றவும் வறட்சியை குறைக்கவும் உதவுகிறது. இது தலைக்கு குளிர்ச்சியை தருகிறது. தலையில் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.

பொடுகு பிரச்சனைக்கு சிறந்த தீர்வாக இருக்கிறது. தலையில் அதிகப்படியான எண்ணெயை அகற்றி தலையை ஈரப்பதத்துடன் வைத்திருக்கிறது.

ஆண்களுக்கு ஏற்படும் வழுக்கையை குறைக்க கற்றாழை பயன்படுகிறது. கற்றாழையை தலையில் தொடர்ந்து தேய்த்துவர அதிகபடியான முடிஉதிர்வை தடுத்து முடிக்கு புத்துணர்த்தி தருகிறது. கற்றாழை ஜெல்லை தலையில் பூசுவதன் மூலம் சேதமடைந்த மயிர்க்கால்களை சரிசெய்கிறது.

கற்றாழை ஜெல் இயற்கையாகவே குளிர்ச்சியான தன்மையை கொண்டது. அதனால் அதை தலையில் தடவும்போது வெப்பத்தை குறைத்து முடி உதிர்வதைத் தடுக்கிறது. பொடுகிற்கு கற்றாழை ஜெல் ஒரு இயற்கை தீர்வாகும். இது உச்சந்தலையை ஈரப்பதமாக்கி பொடுகை குறைக்கிறது.

கற்றாழையை தலையில் தேய்த்து வர தலையில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் முடி உதிர்வதையும் முடி உடைவதையும் தடுக்கும். மேலும் முடிக்கு நல்ல பளபளப்பும் தரும்.

கற்றாழை முடிக்கு சிறந்த இயற்கை கண்டிஷனராக செயல்படுகிறது. இது வேர்களிலிருந்து முடியை வளர்த்து பலப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் அவற்றை மென்மையாகவும் பிரகாசமாகவும் வைத்திருக்கிறது.

கற்றாழை சாற்றை எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் வெறும் வயிற்றில் எடுப்பது நல்லது அல்லது உணவிற்கு முன்பு எடுப்பது நல்லது. சிறிய அளவில் வெறும் வயிற்றில் காலையில் குடித்து வர உடலுக்கு பெரும் நன்மை பயக்கும்.

கற்றாழை சாறை குடிப்பதால் உடலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கிறது. உடலுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதால் முடியை உள்ளிலிருந்து ஆரோக்கியமானதாக உருவாக்குகிறது. அதனால் வலுவான ஆரோக்கியமான முடி கிடைக்கிறது.

admin

Recent Posts

Machakalli Lyrical Video

Machakalli Lyrical Video | Renigunta 2 | Johnny | Shali Nivekas | Manu Ravichandran

16 hours ago

சமூக வலைதளங்களில் இருந்து விலகியது ஏன்? மனம் திறந்த ஐஸ்வர்யா லட்சுமி!

தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. திரைத்துறையில் தொடர்ந்து பிஸியாக இருந்தாலும், சமூக…

17 hours ago

பாலா இயக்கத்தில் விஜய் சேதுபதி.. எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் புதிய கூட்டணி!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது…

17 hours ago

ஜெயிலர் 2 சென்சார் சான்றிதழ் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது!

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக…

17 hours ago

டோரதி மனதில் ஆழமாகப் பதிந்தது.. படக்குழுவை பாராட்டிய மாரி செல்வராஜ்!

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தைப்…

17 hours ago

சிபிராஜ் தொடங்கிய புதிய தயாரிப்பு நிறுவனம்.. ரசிகர்களிடம் ஆதரவு கேட்ட நடிகர்

தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ், ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து வித்தியாசமான…

17 hours ago