Ajith Kumar launches new production company
அஜித் குமார் ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது. இந்தப் படத்தை இவரது பேன் பாயான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியிருந்தார்.
இந்தத் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக அஜித் 64 படத்தையும் ஆதிக் தான் இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகி இருந்தது சமீபத்தில் ஆதிக் இந்த படம் குறித்து சில அப்டேட்டுகளையும் வழங்கி இருந்தார் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் சொல்லியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தற்போது அஜித் கார் ரேஸில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் தற்போது அஜித் குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் எல்எல்சி என்ற பெயரில் தென்னிந்திய வர்த்தக சபையில் தயாரிப்பாளராக பதிவு செய்துள்ளார்.
இதற்காக இரண்டு லட்சம் ரூபாய்க்கும் மேல் பணத்தை செலுத்தி ஆயுட்கால உறுப்பினராகவும் பதிவு செய்துள்ளார். அஜித் குமார் தற்போது தயாரிப்பாளராக மாறி இருப்பதால் தொடர்ந்து படங்களில் நடிப்பாரா என்று கேள்வியும் எழுந்து வருகிறது.
இவரின் இந்த புதிய முயற்சிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த தகவல் இணையத்தின் வெளியாகி வைரலாகி வருகிறது.
Mr X Tamil Trailer | Arya | Gautham Karthik | Sarath Kumar | Manju Warrier…
Vibe Vaasey Lyric Video | Love Insurance Kompany | Pradeep Ranganathan | Anirudh | Vignesh…
Pappali Pazhamey Music Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Chaithra J Achar
Battle Trailer | Arjun Prabhakaran, Aradhya, Munishkanth | Jeeva | Narayanan P
Kannamma En Kannamma Lyric Video | Dhanush | Vignesh Raja | GV Prakash | Ishari…
Ambuli Rock Video Song | Leader | Legend Saravanan | R. S. Durai Senthilkumar |…