Ajith 61 Title Update
வலிமை படத்திற்கு பிறகு அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தின் தலைப்பு வைரலாகி வருகிறது.
அஜித் நடித்த ’வலிமை’ படத்திற்கு ரசிகர்கள் பலத்த வரவேற்பைக் கொடுத்திருந்தாலும் சிலர் கடுமையாக விமர்சனத்தை வைத்திருந்தார்கள். படத்தின் நீளம் அதிகமாக இருக்கிறதென்று கருத்து முன் வைக்கப்பட்டது. இதனால் படம் வெளியான இரண்டாம் நாளே இருபது நிமிடங்கள் குறைக்கப்பட்டது. நல்ல வசூல் செய்திருந்தபோதும் படத்தைப் பற்றி எதிர்மறையான கருத்து ஏன் வருகிறது என்று அஜித் கண்காணிக்க ஆரம்பித்தார். அதன் குறைகள் எடுத்து வைக்கப்பட்டது.
இந்நிலையில் தனது அடுத்த படத்தை போனி கபூர் நிறுவனத்திற்கே நடிக்க இருக்கிறார். அந்தப் படத்தை வினோத் இயக்குகிறார். இதற்கான பணிகள் வேகமாக நடந்து வருகிறது. ஆந்திராவில் இருக்கும் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் சென்னை அண்ணாசாலை போல் பிரமாண்ட செட் போடப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தில் கதாநாயகனாகவும் வில்லனாகவும் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார். படத்திற்குப் பாரதியாரின் கவிதைகளிலிருந்து ‘வல்லமை’ என்ற சொல்லை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த ஆண்டே ’வல்லமை’ படம் வெளியாகும் என்று அஜித் தரப்பில் கூறப்படுகிறது.
JAILER 2 Official Trailer | Superstar Rajinikanth | Sun Pictures | Anirudh | Nelson
ஊரே பயப்படும் ரவுடியாக வலம் வரும் விஜய் சேதுபதி, சாராயம் காய்ச்சி பிழைப்பு நடத்துவதுடன், கட்டப்பஞ்சாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். மனைவி…
சுமார் 4,000 ஆண்டுகளாக உயிருடன் வாழ்ந்து வரும் மனிதராக நிவின் பாலி. காலங்கள் பல கடந்தாலும், அஞ்சலி மீதான அவரது…
ஆந்திராவில் தாதாவாக இருக்கும் சம்பத்துக்குச் சொந்தமான ரூ.1,000 கோடி மதிப்பிலான மாஃபியா பணம் வெளிநாட்டில் உள்ள ஒரு லாக்கரில் பாதுகாக்கப்படுகிறது.…
பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ப்ரீத்தி முகுந்தன், பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி அசோக் செல்வனை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். திருமணத்திற்குப்…
ஆம்புலன்ஸ் ஓட்டுநராக இருக்கும் பகத் பாசில், சவால் விட்டு ஆம்புலன்ஸ் ஓட்டி பணம் சம்பாதித்து வருகிறார். இந்நிலையில், பிரபல கடத்தல்…