நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் பேச்சு இணையத்தில் வெளியாகியுள்ளது.
கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து வியாபாரி,கல்லூரி, படிக்காதவன், பையா, கண்டேன் காதலை, சுறா, தில்லாலங்கடி, சிறுத்தை போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வரும் தமன்னா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.இவர் தற்போது பிரபலமடைந்து வருவதற்கான காரணத்தை கூறியுள்ளார்.
அதாவது தமன்னாவின் நடனத்திற்கு சமீபமாக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் இது குறித்து தமன்னா பேசியுள்ளார். கடினமான நடன அசைவுகளை முயற்சிக்க என்னை தூண்டியது அல்லு அர்ஜுன் தான் என்றும் அதனால் தான் நிறைய படங்களில் நடனமாட வாய்ப்பு கிடைத்து பிரபலமாகி இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
