Actress simran-about-vaali-song-trolls
தமிழ் சினிமாவில் அஜித் குமார் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற திரைப்படம் வாலி. எஸ் ஜே சூர்யா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஜோதிகா மற்றும் சிம்ரன் என இருவரும் நடித்திருந்தனர்.
இந்த படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகின. அந்த பாடல்களில் ஒன்றுதான் நிலவை கொண்டு வா. உன்னிகிருஷ்ணன் மற்றும் அனுராதா ஆகியோர் இணைந்து இந்த பாடலை பாட தேவா படத்திற்கு இசையமைத்திருந்தார்.
சமீபத்தில் இந்த பாடலின் சாங் ரெக்கார்டிங் செக்ஷன் ட்ரோல் என வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பலரை கவர்ந்து வருகிறது. இந்த வீடியோவை நடிகை சிம்ரன் தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து கருத்து தெரிவித்துள்ளார். வாரத்தின் முதல் நாளான இன்றைய பொழுதை இந்த வீடியோவுடன் சிறப்பாக தொடங்கி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இதெல்லாம் ரூம் போட்டு யோசிப்பீங்களா எனவும் கேட்டுள்ளார்.
உன்னிகிருஷ்ணன் அவர்களும் இந்த வீடியோ பற்றி பேட்டி ஒன்றில் இதை பார்த்து பலரது மனசு லேசாகி உள்ளது. அது எனக்கு சந்தோஷம் தான் என தெரிவித்துள்ளார். தேவா தான் இந்த பாடலை இப்படி பாட சொன்னதாகவும் இருவரையும் தனித்தனி ரூமில் வைத்து பாடலை ரெக்கார்ட் செய்ததாக தெரிவித்துள்ளார்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…