vijay-tv serials mega-sangamam-trolls
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்கள் தான் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2. இரண்டு சீரியல்களும் ஒளிபரப்பாக தொடங்கிய போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது இரண்டும் டல்லடித்து வருகிறது.
பாரதி கண்ணம்மா சீரியல் பொருத்தவரை டிராக் மாறி கதை ட்ராக் மாறி நகர்ந்து வருவது மக்கள் மத்தியில் சலிப்பை ஏற்படுத்தி உள்ளது. பாரதியும் கண்ணம்மாவும் எப்போது சேருவார்கள் என எதிர்பார்த்த ரசிகர்கள் இப்போது இந்த சீரியலை பார்ப்பதில் ஆர்வம் குறைந்து விட்டதாக கூறி வருகின்றனர்.
அதேபோல் ராஜா ராணி சீரியல் சந்தியா படித்து போலீஸாக உருவெடுப்பாள் என்று பார்த்தால் வழக்கம்போல் சந்தியா ஏதாவது செய்ய சிவகாமி அதை குற்றம் சொல்வது என ஒரே டிராக்கிள் கதை பயணிக்கிறது. இதுவும் ரசிகர்கள் மத்தியில் போர் அடிக்க தொடங்கி விட்டது. முதலில் சிவகாமியின் நடிப்பை பார்த்தால் கோபம் வந்தது. ஆனால் தற்போது சிரிப்புதான் வருகிறது என கிண்டல் அடித்து வருகின்றனர்.
இப்படி இரண்டு சீரியல்களும் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்த நிலையில் தற்போது மெகா சங்கமம் என்ற பெயரில் ஒன்றிணைந்துள்ளது. இதனைப் பார்த்து ரசிகர்கள் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இரண்டு சீரியல்களுக்கு தான் மகா சங்கமம் நடக்கும். ஆனால் இப்போது ஓடாத ரெண்டு சீரியல்களுக்கும் மெகா சங்கமத்தை ஆரம்பிச்சிட்டீங்களா? இந்த மெகா சங்கம் அத்தோடு இரண்டு சீரியல்களையும் முடித்து விடுங்கள் என ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
மகா சங்கமத்தின் முதல் நாளான இன்றைய எபிசோடும் பெரிதாக எந்தவித சுவாரசியமும் இல்லை என ஹாட்ஸ்டாரில் எபிசோடை பார்த்தவர்கள் நொந்து கொள்கின்றனர்.
Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar
Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…
Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…