பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமான ஒரு நடிகை ஓவியா.
மலையாள நடிகையான ஓவியா, தமிழில் களவானி படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார் ஓவியா.
அந்த லாக் டவுன் காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் ரொம்பவும் ஆக்டிவாக இருந்துவரும் நடிகை ஓவியா தற்போது திடீரென்று ஒரு லவ் ஹிட் பதிவிட்டுள்ளார்.
அதில் “நாம் நேசிப்பவர்கள் ஒருபோதும் நம்மைவிட்டு விலகிப்போவதில்லை! அவர்கள் நம் அருகில் இருக்கமாட்டார்கள். நாம் அவர்களை பார்த்திருக்கமாட்டோம், கேட்டிருக்கமாட்டோம். இருந்தபோதிலும் அவர்களை அதிகமாக நேசிப்போம். லவ் யூ ஸ்வீட் ஹார்ட்” என குறிப்பிட்டுள்ளார்.
இப்படி ஒரு காதல் பதிவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதால் ஓவியா ஆர்மி ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகள் எழத் தொடங்கிவிட்டது.
ஒருவேளை நடிகர் ஓவியா காதலில் எங்கேயோ சிக்கிவிட்டாரா? என்றும் இன்னும் அவர் பிக் பாஸ் ஆரவ்வை மறக்கவில்லையா? இதுபோன்ற பல கேள்விகளை சரமாரியாக அடிக்கி வருகின்றனர்.
Those we love never go away!they walk beside us Unseen,unheard but always near,so loved, so missed but always so very dear ????
— Oviyaa (@OviyaaSweetz) August 19, 2020

