இளம் ஹீரோக்களுக்கு வழி விடுங்க என நமிதா நச் பதில் கொடுத்துள்ளார்.
தமிழ் தெலுங்கு கன்னடா போன்ற பல மொழிகளில் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் நமீதா. இவர் தமிழில் ஏய் படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து சாணக்யா, பம்பர கண்ணாலே, ஆணை, இங்கிலீஷ் காரன், கோவை பிரதர்ஸ், பச்சை குதிரை, நீ வேணுண்டா செல்லம், வியாபாரி, நான் அவன் இல்ல, அழகிய தமிழ் மகன், பில்லா, தி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட நமிதா தற்போது சினிமாக்களின் முன்னணி ஹீரோக்களாக இருந்து வரும் விஜய் மற்றும் அஜித் இருவரும் படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வராதது குறித்து கேட்டுள்ளனர் அதற்கு பதில் அளித்த நமிதா ஹீரோயின் மட்டும் அஞ்சு பத்து வருஷத்துல நீங்க ரீப்ளேஸ் பண்ற மாதிரி ஹீரோவையும் பண்ணலாம்.
நிறைய வளர்ந்து வரும் ஹீரோக்கள் அதிக டேலண்ட் உடன் இருக்கிறார்கள் அவருக்கும் வழி விடலாம் வாய்ப்பு கொடுக்கலாம். என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


