தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆலியா மானசா. இந்த சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே இவர்களுக்கு ஒரு மகள் இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்து வருகிறார் ஆல்யா.
மேலும் இவர் ராஜா ராணி 2 சீரியலில் நடித்து வந்த நிலையில் பிரசவத்தின் காரணமாக இந்த சீரியலில் இருந்து விலகிக்கொண்டார். இந்த நிலையில் சமீபத்தில் சீமந்தம் நடந்த நிலையில் தற்போது வயிற்றில் குழந்தையுடன் சஞ்சீவுடன் சேர்ந்து போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ரசிகர்கள் பலரும் இரண்டாவது குழந்தையை பாதுகாப்பாக பெற்றெடுக்க வாழ்த்து கூறி வருகின்றனர்.
View this post on Instagram