Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

என்னுடைய ஃபேவரைட் நடிகர் இவர்தான்.. விருமன் பட நாயகி ஓபன் டாக்

Actress aditi-shankar-about-suriya

இந்திய திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் சங்கர். இவரது மகளான அதிதி சங்கர் கார்த்திக் ஜோடியாக விருமன் படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார். முதல் படம் வெளியானதற்கு முன்பாகவே நடிகர் சிவகார்த்திகேயன் ஜோடியாக மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில் இவர் விருமன் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் ரோலக்ஸ் ரோலக்ஸ் என கத்திய போது இவரும் சேர்ந்து ரோலக்ஸ் என கத்தி ஆரவாரம் செய்துள்ளார். அதன் பின்னர் இந்த வீடியோவை காட்டி பேட்டி ஒன்றில் இது குறித்து கேட்ட போது உண்மையாகவே சூர்யா சார் தான் என்னுடைய ஃபேவரைட். ரசிகர்கள் ரோலக்ஸ் ரோலக்ஸ் என கத்தியால் என்னால் உணர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை அதனால் தான் நானும் கத்தினேன் என கூறியுள்ளார்.

இதனால் இவர் நிச்சயம் அடுத்த படத்தித் சூர்யாவிற்கு ஜோடியாக இணைந்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Actress aditi-shankar-about-suriya

Actress aditi-shankar-about-suriya