Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து விஷால் போட்ட பதிவு

இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ரத்னம்’ திரைப்படத்தில் நடிகர் விஷால் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். மேலும், கவுதம் மேனன், சமுத்திரகனி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தினை தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கார்த்திக் சுப்பாராஜின் ‘ஸ்டோன் பெஞ்ச்’ தயாரிப்பு நிறுவனத்தோடு ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் கோடையில் திரையரங்குகளில் வெளியாகுகிறது. இதையடுத்து படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், நடிகர் விஷால், பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “அன்புக்குரிய பிரதமர் நரேந்திர மோடி. உங்களின் மற்றொரு சாதனைக்கு வாழ்த்துகள். ஜெய் ஸ்ரீராம். ராமர் கோவில் இன்னும் பல ஆண்டுகள் நினைவுகூரப்படும். இந்த தருணத்திற்காக உயிர்த் தியாகம் செய்த அனைவருக்கும் தலைமுறை தலைமுறைகளாக இங்கு வந்து, அஞ்சலி செலுத்துவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலில் இன்று கும்பாகிஷேக விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெறும் இந்த விழாவில் பலர் கலந்து கொண்டுள்ளனர்.