தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக, தயாரிப்பாளராக, தயாரிப்பாளர் சங்க தலைவராக இருந்து வருபவர் நடிகர் விஷால். இவர் ஏழை எளிய மக்களுக்காக தொடர்ந்து பல உதவிகளை செய்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது கொளுத்தும் வெயிலில் மக்களுக்கு உதவும் வகையில் திருவள்ளூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் விஷால் ஆணைக்கிணங்க தண்ணீர் பந்தல் அமைத்து நீர் மோர், பழங்கள் உள்ளிட்டவைகளை வழங்கி உள்ளனர்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய பாராட்டுக்களை பெற்று வருகிறது.
