கோலிவுட் சினிமாவில் மாபெரும் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் காஷ்மீரில் நடைபெற்று வந்த படப்பிடிப்பை நிறைவு செய்து சென்னை திரும்பிய விஜய் தற்போது நடிகர் அஜித்குமாரின் தந்தையின் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.
நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியம் உடல் நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். இவரது மறைவுக்கு திரையுலகினர் மற்றும் பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது உடல் தற்போது பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இந்நிலையில் அஜித் தந்தையின் மறைவுக்கு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித்தின் வீட்டிற்கு நேரில் சென்று நடிகர் விஜய் ஆறுதல் கூறியுள்ளார். இது தொடர்பான வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அஜித் வீட்டுக்கு சென்று விஜய் அண்ணா ஆறுதல் #ThalapathyVijay #Thala #ThalaAjith #Ajith #Vijay @actorvijay @SureshChandraa pic.twitter.com/8jMQmRyOYJ
— V I S H N U (@S_VishnuVijay) March 24, 2023