Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நான் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த அறிமுகம் காட்சி இதுதான்.. விஜய் சேதுபதி ஓபன் டாக்.!!

actor vijay sethupathi latest speech viral

விக்ரம் வேதா படத்தில் விஜய் அஜித் சார் நெஞ்சுக்கு எனக்கு பில்டப் கொடுத்திருந்தாங்க என்று பேசி உள்ளார் விஜய் சேதுபதி.

தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து பீட்சா, நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், நானும் ரவுடி தான், சேதுபதி, 96 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார். ஹீரோவாக திரைப்படங்களில் கலக்கியிருந்தாலும் முன்னணி நடிகர்களின் படத்தில் வில்லனாக நடித்து தனது திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

தற்போது இவரது நடிப்பில் முத்து என்கிற காட்டான் என்ற வெப் சீரிஸ் மார்ச் 27ஆம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் இல் வெளியாக உள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் விஜய் சேதுபதியிடம் நீங்கள் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த அறிமுகம் காட்சி எது என்ற கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த விஜய் சேதுபதி விக்ரம் வேதா படத்தில் என்னுடைய அறிமுகக் காட்சி மிகவும் பிடிக்கும் எனவும் அதில் பில்டப் ஓவராக இருக்கிறது கொஞ்சம் குறைத்து விடுங்கள் என்று புஷ்கர் காயத்ரியிடம் சொன்னேன் இது மட்டும் இல்லாமல் விஜய் அஜித் சார் ரேஞ்சுக்கு பில்டப் இருக்கிறது என்று கூறினேன்.

ஆனால் புஷ்கர் காயத்ரி ரொம்பவும் நம்பினார்கள் அதேபோல் அதற்கான வெற்றியும் கிடைத்தது இன்னொரு படமான விக்ரம் அதுவும் லொகேஷன் நம்பிக்கை தான் எனக்கு தொந்தியும் தொப்பையும் இருந்தது கலாய்த்து விடுவார்கள் என்று பயந்த போது காட்சியை பார்த்ததும் அனைவருக்கும் பிடித்து விட்டது என்று கூறியுள்ளார்.

மேலும் ஆண்டவன் கட்டளை விடுதலை போன்ற படங்களிலும் என்னுடைய அறிமுகக் காட்சி பிடிக்கும் எனவும் தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான திரைப்படங்களில் எந்தப் படத்தில் அறிமுகக் காட்சி உங்களுக்கு பிடிக்கும் என்பதை எங்களுக்கு கமெண்ட் பண்ணுங்க. இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actor vijay sethupathi latest speech viral
actor vijay sethupathi latest speech viral