actor surya-went-to-vijayakanth-memorial
“நடிகரும், தே.மு.தி.க தலைவருமான விஜயகாந்த் கடந்த 28-ஆம் தேதி உடல் நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு தமிழகம் முழுவதும் உள்ள மக்களை பெரிதும் பாதித்தது. விஜயகாந்தின் உடல் இறுதி அஞ்சலிக்காக சென்னை தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. இவரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் நேரிலும், சமூக வலைதளத்தின் மூலமாகவும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து விஜகாந்தின் நினைவிடத்திற்கு தொடர்ந்து ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இந்நிலையில், நடிகர் சூர்யா இன்று விஜயகாந்த் நினைவிடத்தில் கண்ணீர் விட்டு கதறி அழுது அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர், \”அண்ணனின் இந்த பிரிவு ரொம்ப துயரமானது. ஆரம்பகாலக்கட்டத்தில் விஜயகாந்த் உடன் ‘பெரியண்ணா’படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அப்போது அவர் தட்டில் இருந்து உரிமையாக எனக்கு சாப்பாடு எடுத்து வைத்தார். நீ நடிக்கிறார் உனக்கு சக்தி வேண்டும் என்று கூறினார். நட்சத்திரம் என்றாலே விலகி இருப்பார்கள். ஆனால் விஜயகாந்த் எல்லோரையும் அருகில் வைத்திருப்பார். அவரை மறுபடியும் சந்தித்து உட்கார்ந்து பேச முடியவில்லை என்று வருத்தமாக இருக்கிறது. விஜயகாந்த் போன்று இன்னொருத்தர் இல்லை. இறுதி அஞ்சலியில் அவர் முகத்தை பார்க்க முடியவில்லை என்பது ஈடுசெய்ய முடியாத இழப்பு. அவரின் குடும்பத்தாருக்கும் சொந்தங்களுக்கும், தொண்டர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.”,
கானா பாடகரான ஹிப்ஹாப் ஆதி, கானா இசையை உலகளவில் கொண்டு செல்ல வேண்டும் என்ற கனவுடன் பயணிக்கிறார். பல்வேறு மேடைகளில்…
தெலுங்கானாவில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின மக்கள் வறுமையிலும் அடிமைத்தனத்திலும் வாழ்கின்றனர். அவர்கள் வசிக்கும் ‘பாரடைஸ்’ பகுதியின் அதிகாரமிக்க தலைவனாக மோகன் பாபு…
அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’…
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில், நானி, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, மோகன் பாபு உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘தி பாரடைஸ்’…
‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், நடிகர் தனுஷின் 56-வது திரைப்படமான…
வித்தியாசமான விதிமுறைகள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களுடன் பரபரப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10 நிகழ்ச்சியில், இந்த வார…