Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சூர்யாவுக்கு இரண்டு தம்பியா? வெளியான புகைப்படத்தால் குழப்பமடைந்த ரசிகர்கள் .!

Actor Suriya With Sister in Childhood Photo

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் மகன் ஆன சூர்யாவிற்கு கார்த்தி என்ற தம்பியும் பிருந்தா என்ற சகோதரியும் இருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது பாடகியாக விளங்கும் பிருந்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எனக்கு மிகவும் பிடித்த போட்டோ என ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதைப்பார்த்த ரசிகர்கள் சூர்யாவுக்கு கார்த்தி மட்டுமில்லாமல் இன்னொரு தம்பி இருக்கிறாரா என குழப்பம் அடைந்துள்ளனர். ஆனால் எனக்கு என் சகோதரர்களை போல இருக்க வேண்டும் என்றுதான் ஆசை கல்லூரி படிக்கும் வரை சூர்யாவின் ஆடைகளை எடுத்து போட்டுக் கொள்வேன் முடி வெட்டிக் கொண்டேன். எனக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் தெரிய கூடாது என நினைப்பேன்.

இந்த போட்டோவில் ஆண்பிள்ளை போல இருப்பது நான்தான் என கூறியுள்ளார். பிருந்தா சூர்யா மற்றும் கார்த்தியுடன் இருக்கும் இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.