Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீண்டும் சூர்யா, ஹரி இணையும் மாஸ் கூட்டணி..! வைரலாகும் புதிய படத்தின் அப்டேட்

Actor Suriya New Movie Update

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர்தான் நடிகர் சூர்யா. சமீபத்தில் வெளியான ‘விக்ரம்’ திரைப்படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சூர்யா ரசிகர்களின் இடையே பாராட்டுகளை பெற்றிருந்தார். தற்போது சூர்யா 41 படமான வாடிவாசல் படத்தில் நடித்து கொண்டிருக்கும் இவர் மீண்டும் இயக்குனர் ஹரியுடன் இயக்கத்தில் நடிக்க வேண்டும் என்று இருவருக்கும் இடையே இருக்கும் பிரச்சனைகளை மறந்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

ஏற்கனவே சூர்யா நடிப்பில் ஹரி இயக்கத்தில் வெளியான ஆறு, வேல், சிங்கம்1,2,3 ஆகிய படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடைந்திருந்தது. அதன் பின் ‘சூரரை போற்று’ படம் OTTயில் வெளியிட்டதை எதிர்த்து பேசிய ஹரிக்கும் சூர்யாவிற்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விட்டது. அதனால் இயக்குனர் ஹரியின் மீது இருந்த மனக்கசப்பால் நடிகர் சூர்யா அண்மையில் இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான ‘யானை’ திரைப்படத்தில் நடிக்க வந்த வாய்ப்பையும் கைவிட்டு விட்டாராம்.

அதனால் அந்த படத்தில் அருண் விஜய் நடித்துள்ளார். தற்போது அதை எல்லாம் சூர்யா மறந்து மீண்டும் ஹரியின் இயக்கத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளது என்று சமாதானமாக பேசியுள்ளார். அதனால் இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் மீண்டும் சூர்யா ஆறாவது முறையாக “அருவா” என்ற படத்தின் மூலம் இணைய உள்ளார். இந்த படம் குறித்த தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்த நிலையில் ஹரி, சூர்யா இருவருக்கும் இடையே இருந்த மனக்கசப்பின் காரணத்தால் பாதியில் நின்று இருந்தது. தற்போது இருவரும் சமாதானமான நிலையில் மீண்டும் இப்படத்தை ஆரம்பிக்க உள்ளனர்.

இந்த “அருவா” படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக ஞானவேல் ராஜா தயாரிக்க போகும் இப்படத்தில் நடிகை ராஷீ கண்ணா கதாநாயகியாக நடிக்க உள்ளார். தற்போது சூர்யா ‘வாடிவாசல்’ படத்தில் நடித்து கொண்டிருப்பதால் அப்படம் முடிவிற்கு பிறகு இந்த ‘அருவா’ படத்தின் படப்பிடிப்பில் இணைய போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Actor Suriya New Movie Update
Actor Suriya New Movie Update