தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட தொழில்நுட்பத்துடன் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் அப்டேட்களுக்காக ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் நடிகர் சூர்யா & ஜோதிகா தம்பதியினர் தங்களது குழந்தைகளுக்காக தற்காலிகமாக மும்பையில் குடிபெயர்த்துள்ளதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது. அதாவது, மகள் தியா மற்றும் மகன் தேவ் ஆகியோரின் படிப்பிற்காக நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தம்பதியினர் மும்பைக்கு குடி பெயர்ந்துள்ளனர். இதற்காக சுமார் இவர்கள் 70 கோடி செலவில் 9000 சதுர அடியில் வீடு ஒன்றை வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 25 ஆண்டுகளுக்குப் பின் ஹிந்தி திரைப்படம் ஒன்றில் நடிகை ஜோதிகா நடித்து வருவதாகவும், அதன் படப்பிடிப்புகள் மும்பை மற்றும் சென்னையில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.


