தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் வாடிவாசல் படத்தின் டெஸ்ட் ஷூட்டில் பங்கேற்றார்.
மேலும் தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 41 என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் படம் பற்றி தகவல் வெளியானதுமே இந்த படத்தில் நடிகர் சூர்யா இரண்டு வேடத்தில் நடிக்கிறார் அதிலொன்று வாய் பேச முடியாத காது கேளாத கதாபாத்திரம் என சொல்லப்பட்டு வந்தது.
ஆனால் தற்போது இது குறித்து விசாரிக்கையில் இந்த படத்தில் சூர்யா டபுள் ரோலில் நடிக்கவில்லை ஒரே ஒரு ரோலில் தான் நடிக்கிறார் என தெரிய வந்துள்ளது.
ஆனால் அவருடைய கதாபாத்திரம் காது கேட்காத வாய் பேசாத கதாபாத்திரமும் அல்லது வேறு ஏதாவது கதாபாத்திரமா என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. இரண்டு வேடங்கள் என சொல்லப்பட்டு வந்த நிலையில் அது உண்மை இல்லை ஒரே ஒரு வேடம் தான் என தெரிய வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


