விஜயின் அரசியல் வருகை குறித்து சுமன் பேசிய பேச்சு..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருந்தது ஆனால் சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் தற்போது ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளனர்.

இந்தத் திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தளபதி விஜயின் அரசியல் வருகை குறித்து சினிமா பிரபலங்கள், மற்றும் அரசியல் பிரபலங்கள் என பலரும் அவர்களது கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் சுமனிடம் விஜயின் அரசியல் பயணம் குறித்தும் தேர்தல் குறித்தும் கேட்டபோது அதற்கு பதில் அளித்த சுமன் வெறும் கூட்டத்தை வைத்து வெற்றியை தீர்மானிக்க முடியாது எலக்ஷனில் ஒரு வாரத்திற்கு முன் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் எப்படி வேண்டுமானாலும் மனம் மாறலாம் என்று கூறியுள்ளார்.

இது மட்டுமில்லாமல் அதையும் தாண்டி கேஸ்ட் கம்யூனிட்டி என எல்லாமே இருக்கிறது. யூத் ஒரு மாதிரி யோசிப்பாங்க சீனியர் சிட்டிசன் ஒரு மாதிரி யோசிப்பாங்க இவங்க வந்தா எங்களுக்கு என்ன பிரயோஜனம் என்றும் நினைப்பாங்க என்று சொல்லி இருக்கிறார்.

இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Actor Suman answers the question about Vijay’s political journey.!!
jothika lakshu

Recent Posts

‘மண்டாடி’ பார்த்து சூரியை பாராட்டிய ரஜினிகாந்த்!

இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள ‘மண்டாடி’ திரைப்படம் செப்டம்பர் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி,…

16 hours ago

திஷா சலியன் மரண வழக்கு: சிபிஐ FIR பதிவு!

மறைந்த பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் முன்னாள் மேலாளர் திஷா சலியன் மரண வழக்கில், மத்திய குற்றப்புலனாய்வுத் துறை…

16 hours ago

மலையாளத்தில் புதிய வசூல் சாதனை படைத்த ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’

நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் வெளியான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம் மலையாள திரையுலகில் அதிக வசூல் செய்த…

17 hours ago

‘சியான் 63’ படத்தின் தலைப்பு வெளியீடு

‘இருமுகன்’ படத்தின் வெற்றிக் கூட்டணியான நடிகர் விக்ரம் மற்றும் இயக்குநர் ஆனந்த் சங்கர் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘பவர்ஹவுஸ்’…

17 hours ago

சூர்யாவின் ‘சீன்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ‘சீன்’ திரைப்படத்தின் சிறப்பு போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யாவின்…

17 hours ago

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser

Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…

2 days ago