Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜயின் ஜனநாயகன் படத்துடன் மோதும் சிவகார்த்திகேயனின் பராசக்தி.. வைரலாகும் தகவல்..!

actor Sivakarthikeyan clashes with thalapathy Vijay

தளபதி விஜயுடன் நேருக்கு நேராக மோத இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய் இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார்.எச் வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு நேற்று அறிவித்திருந்தது. பொங்கலை முன்னிட்டு 09.01.2026 தேதி வெளியாக உள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

மறுபக்கம் சுதா கொங்காரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் திரைப்படம் பராசக்தி. இந்த படத்தில் ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றன.

தற்போது இந்த திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளது. இதனால் சிவகார்த்திகேயன் மற்றும் தளபதி விஜய் இருவரும் நேருக்கு நேராக மோத உள்ளனர். இந்த இரண்டு திரைப்படங்களில் உங்களுடைய ஃபேவரிட் திரைப்படம் எது? நீங்க எந்த படத்துக்காக வெயிட்டிங் என்பதை எங்களோடு கமெண்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.