சிம்புவின் தக் லைஃப் டாக்: திருமணம் தப்பில்லை, ஆனா ஆள் முக்கியம்!

தமிழ் சினிமாவின் யங் சூப்பர் ஸ்டார் சிம்பு நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘தக் லைஃப்’. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில் கமல்ஹாசன், த்ரிஷா மற்றும் சிம்பு ஆகியோர் கலந்துகொண்டு பல விஷயங்களை மனம் திறந்து பேசினர்.

அப்போது, திருமணத்தைப் பற்றிய கேள்வி சிம்புவுக்கு முன்வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சிம்பு, திருமணத்தின் முக்கியத்துவத்தையும், சரியான வாழ்க்கைத்துணையை தேர்ந்தெடுப்பதன் அவசியத்தையும் தனது விதத்தில் விளக்கினார்.

“திருமணம் என்பது தவறான விஷயம் கிடையாது. ஆனால், அதற்கு சரியான நபரை தேர்ந்தெடுப்பது தான் மிக முக்கியம். இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான ஆண், பெண் இருபாலரிடமும் விட்டுக்கொடுத்து போகும் மனப்பான்மை குறைந்துவிட்டது என்று நான் நினைக்கிறேன். ‘நீ இல்லன்னா வேறொருவர்’ என்ற எண்ணம் பரவலாக உள்ளது. இது சரியான அணுகுமுறை அல்ல” என்று சிம்பு தனது கருத்தை அழுத்தமாக பதிவு செய்தார்.

மேலும் அவர் கூறுகையில், “ஒவ்வொருவருக்கும் சரியான நேரம் வரும்போது, அவர்களுக்கான சரியான நபர் கிடைக்கும்போது திருமணம் என்பது மிகவும் மகிழ்ச்சியான விஷயமாக அமையும்” என்றார். சிம்புவின் இந்த பக்குவமான பதில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ‘தக் லைஃப்’ படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஒருபுறம் இருக்க, சிம்புவின் இந்த தெளிவான பேச்சு அவரது ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

actor simbu talk about marriage
jothika lakshu

Recent Posts

ரிலீஸ் தேதியில் மாற்றம்.. முன்கூட்டியே வெளியாகும் ‘காளிதாஸ் 2’!

பரத், 2003ஆம் ஆண்டு வெளியான ‘பாய்ஸ்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர். தொடர்ந்து ‘காதல்’, ‘வெயில்’, ‘பழனி’, ‘எம்டன் மகன்’…

7 days ago

“வி.ஜே. பார்வதி பற்றி பேச எதுவும் இல்லை..” – விஜய் சேதுபதி

இயக்குனர்கள் மணிகண்டன் மற்றும் அஜித்குமார் இணைந்து இயக்கியுள்ள வெப் தொடர் “முத்து என்கிற காட்டான்”. இதில் நாயகனாக விஜய் சேதுபதி…

7 days ago

என் அழகைப் பார்த்து ரசிகர்கள் மனைவியிடம் சொல்வது இதுதான்! – ஷில்பா மஞ்சுநாத்

தமிழ் சினிமாவில் ‘எமன்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷில்பா மஞ்சுநாத். தொடர்ந்து ‘இஸ்பேட் ராஜாவும் இதயராணியும்’, ‘வெப்’, ‘சிங்கப்பெண்ணே’, ‘சென்னை…

7 days ago

Naana Mastana – Video Song

https://youtu.be/I3oG_R6Mqzo?si=XptwLOUuHy-mFlAD

1 week ago

Kenatha Kanom (Video Song)

Kenatha Kanom (Video Song) , Kenatha Kanom , Nivas K Prasanna , Yogi Babu, Lovelyn…

1 week ago

Perambur Gaana song

https://youtu.be/2Sz1o1NqKL4?si=aMNbe_Gg3w2EQqQY

1 week ago