எனக்கு அரசியல் அனுபவம் கிடையாது என சிலம்பரசன் பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு இவரது நடிப்பில் தக் லைப் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது.இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் சிம்பு பிஸியாக நடித்து வருகிறார்.
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது இந்த படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது சிம்பு பேசியிருப்பது வைரலாகி வருகிறது.
அதாவது எனக்கு அரசியலும் தெரியாது அதில் அனுப்பவும் கிடையாது இத்தனை வருடம் சினிமாவில் இருந்திருக்கிறார் விஜய் அவரது கடைசி படமான ஜனநாயகன் திரைக்கு வரவேண்டும் என்றுதான் அவருக்கு ஆதரவாக ட்வீட் செய்தேன். அரசியல் பற்றி பேசுவதற்கு நான் சரியான ஆளும் கிடையாது அவருடைய அரசியலில் எதிர்காலத்திற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் சொல்லிக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


