தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து சிம்புவின் நடிப்பில் அடுத்ததாக பத்து தலை மற்றும் வெந்து தணிந்தது காடு என இரண்டு திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
சர்ச்சைக்குரிய நடிகராக இருந்தாலும் சிம்புவுக்கு நாளுக்கு நாள் ரசிகர் பட்டாளம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் இவரை இன்ஸ்டாகிராமில் பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இவரை பின் தொடர்பவர்களின் எண்ணிக்கை 6 மில்லியன் ஆக உயர்ந்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் அதிகமான பாடல்களை கொண்ட முதல் தமிழ் நடிகராக சிம்பு இடம் பிடித்துள்ளார். அவருக்கு அடுத்தடுத்த இடங்களில் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், சூர்யா மற்றும் தனுஷ் ஆகியோர் உள்ளனர்.
