“உணவை உற்பத்தி செய்து தரும் விவசாயிகளை கொண்டாட வேண்டும்”: கார்த்தி

விவசாயத்தில் சாதனை புரிபவர்களையும், அதற்கு உறுதுணையாக இருந்து பங்களிப்பவர்களையும் கவுரவப்படுத்தி அங்கீகரிக்கும் உழவன் ஃபவுன்டேஷனின் ‘உழவர் விருதுகள் 2024’ விழா கோலகலமாக சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினர்களாக நடிகரும் ஓவியருமான சிவகுமார், நடிகை ரோகிணி, நடிகர் மற்றும் இயக்குனர் தம்பி ராமையா, நடிகர் பசுபதி மற்றும் நடிகை கீர்த்தி பாண்டியன் கலந்துக் கொண்டார்கள். இவர்களோடு மருத்துவர் கு.சிவராமன், பேராசிரியர் சுல்தான் அஹ்மது இஸ்மாயில், வேளாண் செயற்பாட்டாளர் பாமயன் மற்றும் OFM அனந்து ஆகியோரும் கலந்துக் கொண்டார்கள். மேலும் வேளாண் துறைசார் வல்லுநர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துக் கொண்ட இந்த விழா இனிதே நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டையும் போலவே இந்த ஆண்டும் விருதாளர்கள் ஒவ்வொருவருக்கும் விருதோடு ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. இந்த விழாவில் நடிகரும் உழவன் ஃபவுண்டேஷன் நிறுவனருமான கார்த்தி பேசும்போது, \”ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகள் பொங்கல் வைத்து இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி சொல்கிறார்கள். அந்த நாளைத்தான் நாம் பொங்கல் திருநாளாக கொண்டாடுகிறோம்.

ஆனால், நாம் தினம் உண்ணும் உணவை வழங்கும் விவசாயிகளுக்கு நன்றி கூற மறந்துவிடுகிறோம். அவர்களுக்கு என்றென்றுமே நன்றி கூற வேண்டும். பொங்கல் அன்று மட்டுமே விவசாயிகளை நினைக்கக் கூடாது. சினிமா, விளையாட்டு உள்ளிட்ட அனைத்திலுமே வெற்றி பெறும் போது விழா வைத்துக் கொண்டாடுகிறோம். எவ்வளவு பெரிய இயற்கை பேரிடர் நிலையிலும் நமக்கான உணவை உற்பத்தி செய்து தரும் விவசாயிகளைக் கொண்டாட வேண்டும் என்று தான் உழவர் விருதுகள் விழாவினைத் தொடங்கினோம். இது 5-வது ஆண்டு விழா. பல்வேறு வேளாண் சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவித்திருப்பது பெருமையாக இருக்கிறது. இந்த விருதின் மூலம் அவர்களுடைய வாழ்வில் ஒரு சிறு வெளிச்சத்தை ஏற்படுத்தி விடமுடியும் என்று நம்புகிறோம். வரும் காலங்களிலும் இதுப்போல விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் உறுதுணையாக இருக்கும் நல் உள்ளங்களை அடையாளப்படுத்தி கவுரவப்படுத்துவதோடு, விவசாயத்திற்கான பங்களிப்பையும் உழவன் ஃபவுண்டேஷன் தொடர்ந்து செய்யும்\” என கூறினார்.

actor karthi latest speech-goes-viral
jothika lakshu

Recent Posts

கலர்ஃபுல் உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் சாக்ஷி அகர்வால்.!!

நவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி,காலா,விசுவாசம், சின்ரெல்லா, அரண்மனை 3…

3 hours ago

இட்லி கடை: 1 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இட்லி கடை படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

4 hours ago

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் காவியா அறிவுமணி.!!

கலர்ஃபுல் உடைய காவியா அறிவுமணி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலமானவர் காவியா அறிவுமணி. அதனைத்…

4 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, சூர்யா கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

4 hours ago

அருணிடம் விஷயத்தை சொன்ன சீதா.. முத்து எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி…

7 hours ago

திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்.!!

திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

23 hours ago