ஆரம்ப காலத்தில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து பின் தனது தனித்துவமான நடிப்பு திறமையால் பல படங்களில் முதன்மை மற்றும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து பலரது பாராட்டை பெற்றவர் நடிகர் இனிகோ பிரபாகர்.
சென்னை 28, சென்னை 28 II, பூ, சுந்தரபாண்டியன், ஆர்.கே நகர் என இவர் நடித்த அனைத்து படங்களிலும் இவரது நடிப்பும், கதாபாத்திரத்தின் தன்மையை கையாண்ட விதமும் பலரையும் கவர்ந்தது. அழகர் சாமியின் குதிரை, ரம்மி, பிச்சுவாகத்தி, வீரய்யன் படங்களில் நாயகனாக நடித்திருந்தார்.
நடிகர் இனிகோ பிரபாகர் கூறுகையில், “நான் என்றும் என் கதாபாத்திரத்தின் தன்மை மாறாமல் நடிப்பது ரசிகர்களுக்கு பிடித்திருந்தது.
அதிலும் ஆர்.கே நகர் படத்தில் வில்லனாக நடித்திருந்தாலும் அந்த படத்தில் கதாநாயகனுக்கு நிகரான கதாபாத்திரம் என்பதால் எனது நடிப்பு எதார்த்தமாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் சரவண ராஜன் விரும்பினார், நானும் அதையே செய்தேன்.
இயக்குனர் வெங்கட்பிரபு ஆர்.கே நகர் படத்தில் என் நடிப்பை பலரும் பாராட்டியதாக கூறியது என்னை மேலும் உத்வேகப்படுத்தியது.
தற்போது இரண்டு புதிய படங்களில் கதாநாயகனாக நடிக்கின்றேன். இந்த இரண்டு படங்களின் விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றார்.
மனோஜை விஜயா திட்ட, முத்து மீனா சந்தோஷமாக இருந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
நடிகை பிரதியுஷா தற்கொலை வழக்கு: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு தமிழில், மனுநீதி, தவசி, சவுண்ட் பார்ட்டி உள்பட சில…
துருவ் விக்ரம் ஒப்பந்தமாகியுள்ள காதல் கதையில் புதிய படம் துருவ் விக்ரம் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தின் தகவல்கள் காண்போம்.. மாரி…
இயக்குனர் அகில் சத்யன் இயக்கத்திலும் நிவின் பாலி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் சர்வமயா. ரொமான்டிக் காமெடி மற்றும் பேண்டஸி…
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர்களின் ஒருவராக வலம் வருபவர் சங்கர். இவரது இயக்கத்தில் இந்தியன் 2 என்ற திரைப்படம் வெளியாகி…
80ஸ் மற்றும் 90களில் நாயகியாக நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர் தேவயானி சமீபத்தில் சரத்குமார் உடன் இணைந்து 3…