Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பல கோடி ரூபாயில் லண்டனின் புதிய வீடு வாங்கிய தல அஜித்..!!

actor ajithkumar new home in london

எச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாக்கி உள்ள துணிவு திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. இந்த படத்தின் படப்பிடிப்பிற்கு இடையில் அஜித் பைக்கில் உலகத்தை சுற்றி வந்தார்.

இந்த நிலையில் தற்போது அஜித் அவர்கள் லண்டனில் ஒரு புதிய வீடை வாங்கி இருப்பதாக தெரியவந்துள்ளது. அது மட்டுமல்லாமல் அவர் வாங்கியுள்ள இந்த வீட்டின் விலை 100 கோடிக்கு மேல் இருக்கலாம் எனவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இணையத்தில் வைரலாகும் இந்த தகவலை அஜித் ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர். தற்போது ஒரு படத்துக்கு என்பது கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் அஜித் அடுத்ததாக லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்திற்கு 105 கோடி ரூபாய் சம்பளம் வாங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

actor ajithkumar new home in london
actor ajithkumar new home in london