Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

செல்வராகவனை விவாகரத்து செய்ததற்கு இதுதான் காரணம்? சோனியா அகர்வால் ஓபன் டாக்

Actress Sonia Agarwal About Divorce

தென்னிந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் செல்வராகவன். தனித்துவமான இயக்குனராக வலம் வரும் இவர் பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார். தற்போது படங்களில் நடிகராகவும் நடிக்க தொடங்கியுள்ளார்.

குறிப்பாக தளபதி விஜய்க்கு வில்லனாக நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள பீஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். இவர் நடிகை சோனியா அகர்வாலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இருவரும் திருமணம் ஆகி விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இந்த நிலையில் தற்போது முதல் முறையாக விவாகரத்து குறித்துப் பேசியுள்ளார்.

அதாவது செல்வராகவனின் கடின உழைப்பு பிடித்து இருந்ததால் அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். திருமணம் செய்து கொள்ளும் போது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட பிரச்சினைகளால் விவாகரத்து செய்யும் பொழுது மன வலியாக இருந்தது எனத் தெரிவித்துள்ளார்.

சோனியா அகர்வாலை விவாகரத்து செய்த செல்வராகவன் அதற்கு அடுத்ததாக கீதாஞ்சலி என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Sonia Agarwal About Divorce
Actress Sonia Agarwal About Divorce