சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படம் ‘டான்’. அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இப்படத்தை இயக்க உள்ளார். இவர் இயக்குனர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார். மேலும் சூரி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சிவாங்கி, ஆர்ஜே விஜய், பால சரவணன், காளி வெங்கட் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.
டான் படத்தை லைகா நிறுவனமும், சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்க உள்ளார்.
இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் இன்று பூஜையுடன் தொடங்கி உள்ளது. கல்லூரி பின்னணியில் இப்படத்தின் கதை அமைந்துள்ளதால், இப்படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பை கல்லூரியில் நடத்த உள்ளனர்.
#DON ???? Roll????️ Camera???? Action???? started with Poojai @Siva_Kartikeyan @anirudhofficial @priyankaamohan @dop_bhaskaran @iam_SJSuryah @thondankani @sooriofficial @RJVijayOfficial @kaaliactor @Bala_actor @KalaiArasu_ @SKProdOffl @Dir_Cibi @DONMovieOffl @Inagseditor @anustylist pic.twitter.com/to7SHx0v3i
— Lyca Productions (@LycaProductions) February 11, 2021