Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

“கிணத்துக்கடவு தொகுதியில் சீட் கேட்டேனா?” – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம்

Did I Ask for a Seat in Kinathukadavu – Director Lokesh Kanagaraj Responds

தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் என். ஆனந்த் தெரிவித்த கருத்து அரசியல் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது தொடர்பாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

மானியக் கோரிக்கை விவாதத்தின்போது சட்டப்பேரவையில் பேசிய அமைச்சர் என். ஆனந்த், முதலமைச்சர் விஜய்யிடம் பிரபல இயக்குநர் ஒருவர் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டதாகவும், ஆனால் அந்தத் தொகுதியில் நீண்ட காலமாக கட்சிப் பணியாற்றி வரும் மாவட்டச் செயலாளர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என விஜய் தெரிவித்ததாகவும் கூறியிருந்தார்.

இந்தக் கருத்து சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் சீட் கேட்ட அந்த இயக்குநர் யார்? என்ற கேள்வி எழுந்தது. குறிப்பாக, அவர் கேட்ட தொகுதி அமைச்சர் விக்னேஷின் கிணத்துக்கடவு தொகுதி எனவும் தகவல்கள் பரவின.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர், “நான் ஏன் அதை கேட்க வேண்டும்? அமைச்சர் என். ஆனந்த் குறிப்பிட்ட நபர் நான் இல்லை. வேறு யாராவது இருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம், சட்டப்பேரவையில் அமைச்சர் குறிப்பிட்ட இயக்குநர் தான் இல்லை என்பதை லோகேஷ் கனகராஜ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.