இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடித்துள்ள “பராசக்தி” திரைப்படத்திற்கான ரூ.8.39 கோடி சம்பளம் இதுவரை வழங்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி, சென்னை உயர்நீதிமன்றத்தில் சுதா கொங்கரா மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், “பராசக்தி” படத்தின் OTT மற்றும் தொலைக்காட்சி உரிமைகள் மூலம் கிடைத்த வருமானம் தொடர்பான முழு கணக்குகளையும் தாக்கல் செய்ய தயாரிப்பு நிறுவனத்திற்கு உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.
மேலும், ஜூலை 10-ஆம் தேதி வெளியாக உள்ள “இதயம் முரளி” திரைப்படத்தின் வெளியீட்டுக்கு இடைக்காலத் தடை விதிக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஜூலை 8-ஆம் தேதி வரை அந்தப் படத்தின் செயற்கைக்கோள் (Satellite) வெளியீடு தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடாது என்று நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 8-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, டான் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

