விஜய் பிறந்தநாளில் `ஜனநாயகன்’ வெளியிட திட்டம்?
விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ படத்தில் மமிதா பைஜூ, பூஜா ஹெக்டே, பாபி தியோல், ப்ரியாமணி, பிரகாஷ் ராஜ் என பலர் நடித்துள்ளனர். ஜனவரி 9-ந்தேதி வெளியாக இருந்த இப்படம், சென்சார் சான்றிதழ் தொடர்பான சிக்கலால் தள்ளிப்போனது.
தணிக்கை வாரியத்தின்மீது வழக்கு தொடர்ந்த தயாரிப்பு நிறுவனம் வழக்கை வாபஸ் பெற்ற போதிலும், இப்படத்தை ரிவைஷிங் கமிட்டியினர் எப்போது பார்க்கிறார்கள் என்ற விவரம் சொல்லப்படவில்லை. ஆகவே, சுமார் இரண்டு மாதங்களாகியும் இப்பட வெளியீடு எப்போது என்பது கேள்விக்குறியாக உள்ளது.
‘ஜனநாயகன்’ இந்த மாதத்தில் வெளியாகாது என்பது மட்டும் உறுதி. இனிமேல் இந்த ப்ராசஸ் எல்லாம் முடிந்து படத்தை அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டால்கூட, அதற்கும் வாய்ப்பில்லை.
காரணம், ஒரு பக்கம் ரன்வீர் சிங் நடித்துள்ள `துரந்தர் 2′ படம் வெளியாகிறது. இன்னொரு பக்கம் அதே நாளில் யஷ் நடித்துள்ள `டாக்சிக்’ வெளியாகிறது. `ஜனநாயகன்’ படத்தைத் தயாரித்துள்ள கேவிஎன் நிறுவனமே `டாக்சிக்’ படத்தையும் தயாரித்துள்ளது. அதன் பின்னர் தேர்தல் களம் தயாராகிவிடும் என்பதால் ஏப்ரல், மே மாதத்திலும் படம் வெளியாக வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.
எனவே, ஜூன் மாதம், விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு 22-தேதி வெளியாகலாம் என கோலிவுட் வட்டாரம் கணிக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.!


