Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா?

Will we know when Vishal and Sai Dhanshika will get married soon?

விரைவில் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் எப்போது தெரியுமா?

நடிகர் சங்க கட்டிட வேலை பல ஆண்டுகளாக நடந்து வருகிறது. அந்த கட்டிடத்தை கட்டி முடித்து திறப்பு விழா நடத்தி அதில் நடக்கும் முதல் கல்யாணம் என் கல்யாணம் என்று பல ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தார் விஷால். ஆனால், கட்டிட வேலை முடிவதற்குள் விஷால் வாழ்க்கையில் என்னென்னவோ மாற்றங்கள் நடந்துவிட்டது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே நடிகர் சங்க கட்டிட திறப்பு விழா நடக்கும் என்றும், விஷாலின் பிறந்தநாளில் அவருக்கும், சாய் தன்ஷிகாவுக்கும் கல்யாணம் நடக்கும் என்றும் தகவல் வெளியானது.

நடிகர் சங்க கட்டிட வேலை முடியாததால் விஷாலின் பிறந்தநாளில் திருமணத்திற்கு பதில் நிச்சயதார்த்தம் மட்டும் நடந்தது. இதையடுத்து அக்டோபர் மாதம் நடிகர் சங்க கட்டிட திறப்பு விழாவை நடத்தி சாய் தன்ஷிகா கழுத்தில் தாலி கட்டிவிடுவார் விஷால் என்று தகவல் வெளியானது.

அக்டோபர் மாதமும் கட்டிட திறப்பு விழா நடக்கவில்லை. இந்நிலையில் நடிகர் சங்க கட்டிடத்தை எப்பொழுது சார் திறப்பீர்கள் என்று விஷாலிடம் கேட்கப்பட்டது. மார்ச் மாதம் திறப்பு விழா நடக்க வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்றார். அவர் சொன்ன இந்த விஷயத்தை கேட்டு விஷால் ரசிகர்கள் சந்தோஷத்தில் இருக்கிறார்கள்.

மார்ச் மாதம் கட்டிட திறப்பு விழா என்றால், அதே மாதம் நிச்சயம் கல்யாணம் நடக்குமே. அப்படியே மார்ச் இல்லாவிட்டாலும் ஏப்ரல் மாதம் விஷால், சாய் தன்ஷிகா திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Will we know when Vishal and Sai Dhanshika will get married soon?
Will we know when Vishal and Sai Dhanshika will get married soon?