தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் நந்தினி சூர்யாவிடம் கம்பெனியிலிருந்து கொஞ்ச ஆளுங்கள கூட்டிட்டு வந்து பொங்கல் வச்சா நல்லா இருக்கும் என்று சொல்லி நான் சொன்னதை யோசிச்சு பாருங்க என சொல்லி நான் தூங்கப்போகிறேன் என சென்று விடுகிறார். மறுநாள் காலையில் நந்தினி வீட்டு வாசலில் பொங்கல் வைக்க ஏற்பாடுகளை பிரமாதமாக செய்துள்ளார். குடும்பத்தினர் வந்தவுடன் நந்தினி ஆரம்பித்து விடலாம் என சொல்லுகிறார். உடனே அருணாச்சலத்திடம் அம்மாவை முதல் அடுப்பை பத்த வைக்க சொல்லுங்கள் என்று சொல்லி எடுத்து கொடுக்க சுந்தரவள்ளியும் பத்த வைக்க அடுத்த அடுப்பை அருணாச்சலம் பத்த வைக்க சொல்ல அவர் இந்த வீட்டோட மகாலட்சுமி நீதான் நீ பத்தவை என்று சொல்ல வேண்டாம் ஐயா என்று நந்தினி சொல்ல அருணாச்சலம் சூர்யாவும் நந்தினியை பத்த வைக்க சொல்ல அவரும் செய்கிறார்.
மறுபக்கம் சுரேகா மாதவி இடம் எப்பவுமே அவளுக்கு ஒரு பிரச்சனையை கொடுப்போமே இந்த வாட்டி எதுவும் இல்லையா என்று கேட்க அதெல்லாம் ஆல்ரெடி பிளான் பண்ணியாச்சு அவளோட பொங்கல் பானை எப்படி வெடிக்க போகுதுன்னு மட்டும் பாரு அதிர்ஷ்டம் இல்லாதவன அவளை எப்படி துரத்தி விடுவேன் என்று சொல்லுகிறார். அசோகன் மொட்டை மாடியில் நின்று கொண்டு நந்தினி பானையை உடைக்க கல்லை எரிய முயற்சி செய்கிறார். பிறகு குறி பார்த்து கல்லை ஓங்கி அடிக்க சூர்யா பிடித்து விடுகிறார். உடனே அந்தக் கல்லை வந்த வழியில் அடிக்க அசோகனின் மேல் விழுந்து சத்தம் போடுகிறார் உடனே சூர்யா மேல பாத்துட்டு வரேன் என்று ஓடி வர அசோகன் தப்பித்து விடுகிறார். மாதவி பக்கத்தில் வந்து அசோகன் நிற்க அருணாச்சலம் என்னாச்சு மாப்பிள்ளை இவ்வளவு லேட் என்று கேட்க குளிக்க நேரமாகிவிட்டது என்று சொல்லி சமாளித்து விடுகிறார்.
சூர்யா கீழே இறங்கி வந்து யாரும் இல்லை என்று சொல்ல, மீண்டும் அனைவரும் பொங்கல் கொண்டாடுகின்றனர். குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவராக பானையில் பாலை ஊற்றுகின்றனர். பிறகு பொங்கல் வைத்துவிட்டு நந்தினி மஞ்சளை பானையில் கட்டி விடுகிறார் பிறகு குடும்பத்தினர் அனைவரும் சாமி கும்பிடுகின்றனர். உடனே குடும்பத்தினரை வீட்டுக்குள் உட்கார வைத்து சக்கரை பொங்கல் பரிமாற அனைவரும் சாப்பிடுகின்றன. வழக்கம்போல் அருணாச்சலம் நந்தினியின் பொங்கலை பாராட்டி பேசுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா அசோகனிடம் வாய் கொடுக்க உடனே அவர் இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா நானே உண்மையை சொல்லிடுவேன் என்று உள்ளே சென்று விடுகிறார் மறுபக்கம் மாதவி ரூமில் இருந்து கல்லை தூக்கி எறிய சுந்தரவள்ளியின் மேல் பட்டுவிடுகிறது உடனே சுந்தரவல்லி இந்த ரூம்ல இருந்து தான் கல்லு வந்துது என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் பொங்கல் விழாவில் நந்தினிக்கு மாலை மரியாதை செய்ய வர எனக்கு வேணாம் தூய்மை பணியாளருக்கு கொடுங்க என்று அவருக்கு போட வைக்கின்றனர். பிறகு விளையாட்டுப் போட்டிகள் நடக்கிறது என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.


