Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்

Chennai International Film Festival: Sasikumar wins Best Actor award

சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்

சென்னை சர்​வ​தேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி நிறைவடைந்​தது. இந்தோ சினி அப்​ரிசி​யேஷன் பவுண்​டேஷன் தமிழக அரசுடன் இணைந்து நடத்​திய இந்த 23-வது பட விழா​வில் 51 நாடு​களைச் சேர்ந்த 122 திரைப்​படங்​கள் திரை​யிடப்​பட்​டன.

தமிழில் அலங்​கு, பிடிமண், மாமன், மருதம், பறந்து போ, காதல் என்​பது பொதுவுடைமை, மெட்​ராஸ் மேட்​னி, ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்​ராஸ், வேம்​பு, டூரிஸ்ட் பேமிலி, பாட்​ஷா, 3பிஹெச்கே ஆகிய 12 திரைப்​படங்​கள் திரை​யிடப்பட்​டன. நிறைவு விழாவில் விருதுகள் வழங்​கப்​பட்​டன.

இதில் ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்​தில் நடித்த சசிகுமாருக்​குச் சிறந்த நடிகருக்​கான விருது வழங்​கப்​பட்​டது. சிறந்த நடிகைக்​கான விருது, ‘காதல் என்​பது பொது​வுடைமை’ படத்​துக்​காக லிஜோமோல் ஜோஷுக்கு வழங்​கப்​பட்​டது. சிறந்த தமிழ்ப்​படத்​துக்​கான விருது ராமின் ‘பறந்து போ’ படத்​துக்கு வழங்​கப்​பட்​டது.

மற்ற விருது விவரம்: இரண்​டாவது சிறந்த படம் – டூரிஸ்ட் ஃபேமலி (இயக்குநர் அபிஷன் ஜீவிந்த்), சிறப்பு ஜூரி விருது- காளி வெங்​கட் (மெட்​ராஸ் மேட்​னி), சிறப்பு ஜூரி விருது – ஷீலா ராஜ்கு​மார் (வேம்​பு), சிறந்த ஒளிப்​ப​தி​வு – எஸ்​.​பாண்டி குமார் (அலங்​கு) சிறந்த எடிட்​டர் – நாகூர் ராமச்​சந்​திரன் (மாயக்​கூத்​து).

விழா​வில் எம்​ஜிஆர் அரசினர் திரைப்​படக் கல்​லூரி மாணவர்​கள் தயாரித்த ‘கற்​பி’ குறும்​படத்​துக்​குச் சிறப்பு விருது வழங்​கப்​பட்​டது. தமிழ்​நாடு திரைப்பட இயக்​குநர்​கள் சங்​கத் தலை​வர் ஆர்​.​வி.உதயகு​மார், ஸ்பெயின் நாட்​டின் துணை தூதர் ஆண்டனி லோபோ, அமைப்​பின் தலை​வர் சிவன் கண்​ணன், துணைத் தலை​வர் ஆனந்த் ரங்​க​சாமி, பொதுச்​செய​லா​ளர் தங்க​ராஜ் உள்​ளிட்​டோர் உடனிருந்​தனர்.

 

Chennai International Film Festival: Sasikumar wins Best Actor award
Chennai International Film Festival: Sasikumar wins Best Actor award