Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

என் திரை​வாழ்​வில் புதிய முயற்சி: நடிகர் பாபி சிம்ஹா மகிழ்ச்சி

Actor Bobby Simha is happy with a new venture in his film career.

என் திரை​வாழ்​வில் புதிய முயற்சி: நடிகர் பாபி சிம்ஹா மகிழ்ச்சி

நீண்ட இடைவெளிக்கு பிறகு தனக்கான கதையை தேர்ந்தெடுத்துள்ளார் பாபி சிம்ஹா. இது பற்றிய தகவல்கள் பார்ப்போம்..

பாபி சிம்​ஹா, ஹெபா படேல் நாயகன்​-நாயகி​யாக நடிக்​கும் படம் தமிழ், தெலுங்​கில் உருவாகிறது. பெயரிடப்​ப​டாத இப்​படத்துக்கு ஜே.கிருஷ்ணா தாஸ் ஒளிப்​ப​திவு செய்கிறார். சித்​தார்த் சதாசிவுனி இசையமைக்​கிறார்.

யுவா புரொடக் ஷன்ஸ் சார்​பில் யுவா கிருஷ்ணா தொலாட்டி தயாரிக்​கும் இப்​படத்தை மெஹர் யார​மாட்டி இயக்​கு​கிறார். தணி​கலபரணி, சூர்யா ஸ்ரீனிவாஸ் ஆகியோர் முக்​கிய கதா​பாத்திரத்தில் நடிக்கின்றனர். இதன் பூஜை நடைபெற்​றது.

இப்படம் பற்றி பாபி சிம்ஹா தெரிவிக்கையில், ‘தெலுங்​கில் நேரடி​யாக ஒரு படத்​தில் நாயகனாக நடிக்க வேண்​டும் என நினைத்த​போது பல கதைகளைக் கேட்டேன். ஒரு நல்ல கதைக்​காகக் காத்​திருந்த நேரத்​தில் யுவா எனக்கு அழைப்பு கொடுத்​தார்.

கதையைக் கேட்டதும் மிக​வும் பிடித்​தது. இது, நடிக​னாக எனக்​குச் சவாலான கதை. உடனடி​யாக ஒப்புக்கொண்​டேன். என் திரை வாழ்க்கையில் இது புதிய முயற்​சி. வருகிற 22-ந்தேதி முதல் விசாகப்​பட்​டினத்​தில் படப்​பிடிப்​பு தொடங்குகிறது’ என கூறியுள்ளார்.

Actor Bobby Simha is happy with a new venture in his film career.
Actor Bobby Simha is happy with a new venture in his film career.