வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படத்தின் ஷூட்டிங் போட்டோஸ் வைரல்.
சிம்பு நடிக்கும் ‘அரசன்’ திரைப்படத்தின் தகவல்கள் பார்ப்போம்..
தயாரிப்பாளர் வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிக்க சிம்பு அட்வான்ஸ் தொகை வாங்கிய விவகாரத்தால், அரசன் படத்தின் ஷுட்டிங் ஆரம்பிப்பது தள்ளிப்போனது. இதனையடுத்து வெற்றிமாறன், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆகியோர் ஐசரி கணேஷிடம் பேசி, சுமூக தீர்வு ஏற்பட்ட நிலையில், தற்போது ‘அரசன்’ படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியுள்ளது.
முன்னதாக ‘வடசென்னை’ படத்தில் நடித்த சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் ‘அரசன்’ படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மாத இறுதிவரை முதல்கட்ட படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதனையடுத்து சென்னையில் செட் ஒன்றை அமைத்து தொடர்ந்து ஷுட்டிங்கை நடத்துவதற்கும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் படத்தின் மூலமாக அனிருத் சிம்பு மற்றும் வெற்றிமாறனுடன் முதன்முறையாக அவர் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தில் இரண்டு விதமான கெட்டப்பில் சிம்பு நடிக்கவுள்ளார். நடுத்தர வயதிலும், தாடி மீசை இல்லாத இளவயது தோற்றத்திலும் நடிக்கவிருக்கிறார். அதாவது, இளமை-முதுமை ஆகிய தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்போது படப்பிடிப்பு தளத்தில் எடுத்த புகைப்படங்கள் சிம்பு ரசிகர்களால் தெறித்து வருகிறது.


