தலைவர் 173 படத்தில் ரஜினி இப்படி ஒரு கெட்டப்பில் நடிக்கப்போறாரா ?செட்டாகுமா ?
ரஜினி நடிப்பில் கமல் தயாரிக்கும் ‘தலைவர் 173’ படத்தின் இயக்குநர் யார் என்பது அதிகாரப்பூர்வமாக இன்னும் அறிவிக்கபடவில்லை. இருப்பினும், ‘பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் என கணிக்கப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு ரஜினி பிறந்த நாளான வருகிற 12-ந்தேதி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ‘தலைவர்-173’ படத்தில் ரஜினியின் கெட்அப் பற்றப் பார்ப்போம். அதாவது, பல வருடங்களுக்கு முன்பு வெளியான ‘தில்லு முல்லு’ படத்தில் ரஜினி மீசையில்லாமல் நடித்திருந்தார். அதன் பிறகு பல வருடங்கள் கழித்து ‘பாபா’ படத்தில் மீசையில்லாமல் நடித்தார். பிறகு, ‘எந்திரன்’ படத்தில் “ரோபோ” ரோலுக்காக மீசையில்லாத லுக்கிற்கு மாறினார்.
தற்போது ‘தலைவர் 173’ படத்திற்காக ரஜினி மீசை இல்லாத கெட்டப்பிற்கு மாற இருப்பதாக கூறப்படுகிறது. லுக் டெஸ்ட் எல்லாம் வைத்து அந்த கெட்டப் பொருத்தமாக இருந்தால், ரஜினியின் லுக் மாற்றப்படலாம். இல்லை, வேறொரு லுக்கில் தான் ரஜினி நடிப்பார்.
வேட்டையன், கூலி, ஜெயிலர் என அதிரடி ஆக்சன் படமாக இல்லாமல், ஒரு பீல் குட் என்டர்டைனர் படமாக தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதை அமையவே, ரஜினி அவரை தனது 173-வது திரைப்படத்தின் இயக்குநராக தேர்ந்தெடுத்து இருக்கின்றார்.
அடுத்தாண்டு மார்ச் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பை துவங்கி, 2027-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியிடும் முடிவில் படக்குழு உள்ளதாகவும் கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.


