டி.நகர் நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள நம்ம வேலவன் ஸ்டோர்ஸ் பொதுமக்களுக்கு எளிதில் சென்றடையக்கூடிய இடமாக உள்ளது. புதிதாக அமைக்கப்பட்ட பாலத்திலிருந்து இறங்கியவுடன் இடது பக்கத்தில் ஸ்டோர் இருப்பதால் எந்த சிரமமும் இல்லை.
இங்கு 2-வீலர் மற்றும் 4-வீலர் வாகனங்களுக்கு பரவலான பார்க்கிங் வசதியும், ரயில்–பஸ் மூலம் வரும் வாடிக்கையாளர்களுக்கு நடைபாதை தூரத்திலேயே ஸ்டோரைக் அடையக்கூடிய வசதியும் உள்ளதால், ஸ்டோருக்கு அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.
கிறிஸ்துமஸ், நியூ இயர் மற்றும் பொங்கல் போன்ற பண்டிகைகள் நெருங்கும் நிலையில், புதுப் புதுத் தொகுப்புகளுடன் ஸ்டோர் தற்போது கலைகட்டிக் கொண்டிருக்கிறது. பல சீரியல் பிரபலங்களும் இங்கு வந்து ஷாப்பிங் செய்து வருகின்றனர்.
சன் டிவியின் இலக்கியா சீரியலில் நடிக்கும் நடிகை ஹிமா பிந்து சமீபத்தில் பண்டிகை ஷாப்பிங்களுக்காக வேலவன் ஸ்டோர்ஸில் வந்திருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது விஜய் டிவி புகழ் தங்கதுரையும் ஸ்டோரில் ஷாப்பிங் செய்து சென்றுள்ளார். புதிய கலெக்ஷன்களையும் ஆஃபர்களையும் பார்த்த அவர் வியப்பில் ஆழ்ந்துள்ளார்.
முக்கியமாக, வாழைநாறால் தயாரிக்கப்பட்ட புடவையை பார்த்த அவர், அதைத் தொடும் போது கிடைத்த சில்க் போன்ற உணர்வால் ஆச்சரியப்பட்டு உடனே அதை வாங்கியுள்ளார். மேலும் பேன்சி சாரிகளை பார்த்து, “அவார்டு ஃபங்ஷனுக்கு போக இதை போட்டுட்டு போலாம்!” என்று கூறினார்.
அதேபோல், “ஆரி ஒர்க் என்றாலே 4,000–7,000 ரூபாய் சொல்வாங்க… ஆனா இங்க ஆயிரம் ரூபாய்க்கே இவ்வளவு கிராண்டா இருக்கே!” என்று பிரமித்தார்.
ஆண்களுக்கான ஆடைகளையும் பார்த்த அவர், “மூணு ஜீன்ஸ் 1,350 ரூபாயா? எத்தனையோ கடைக்கு போய் இருக்கேன்… இதுபோல ஆஃபர் கொடுத்ததில்லை!” என்று ஆச்சரியப்பட்டார்.
கோட்-சூட் வரை போட்டு பார்த்து, பண்டிகை ஷாப்பிங்களை முடித்த தங்கதுரை, “நம்ம குடும்பத்துக்கேத்த மாதிரி தரமான துணி வாங்க வரணும்னா வேலவன் ஸ்டோருக்கு தான் வாங்க!” என்று கூறியுள்ளார்.
தங்கதுரையின் இந்த ஷாப்பிங் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


