முத்துக்கு உண்மை தெரிய வர ரோகிணி அதிர்ச்சி அடைந்துள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் க்ரிஷ் பெரியப்பாவும் பெரியம்மாவும் கல்யாணியோட அம்மா நம்மளுக்கு கிருஷ்ணா கூட்டிட்டு வந்து காட்டுறேன்னு சொல்லி இருக்காங்க என்று சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து முத்து வருகிறார். சாரிங்க நேத்து வர முடியாமல் போயிடுச்சு என்று சொல்ல அதற்கு அவர்கள் பரவால்ல சார் நீங்க அனுப்புன செல்வமும் நல்லா தான் பாத்துக்கிட்டாரு என்று சொல்லுகிறார். இப்போ எங்க சார் போகணும் என்று கேட்க ட்ரீட்மென்ட் எல்லாம் முடிஞ்சிடுச்சு அடுத்த மாசம் தான் வர சொல்லி இருக்காங்க இப்ப நாங்க கோவிலுக்கு போகணும் என்று சொல்ல முத்து அழைத்துச் செல்கிறார் அங்கு கிரிஷ் பாட்டி என இருவரும் காத்துக்கொண்டிருக்க இவர்கள் கோவிலுக்கு வந்து இறங்கியவுடன் அர்ச்சனை தட்டு வாங்க வேண்டும் என சொல்ல நீங்க உள்ள போங்க சார் நான் வாங்கிட்டு வரேன் என்று முத்து செல்கிறார் பிறகு உள்ளே வந்து கிருஷ் பாட்டியை சந்தித்து இவர்கள் இருவரும் பேசுகின்றனர்.
கிருஷியை கூப்பிட்டு அவர்களிடம் காட்ட அவன் இவர்களிடம் பேச மறுக்கிறான். நான்தான் உங்க பெரியப்பா உங்க பெரியம்மா என்று சொல்லியும் க்ரிஷ் பேச மறுத்ததால் அவன் புது ஆள் கிட்ட பேச மாட்டான் என்று சொல்லுகிறார் எங்க பொண்ணுக்கு உங்க மேல இருக்கிற கோபம் குறையல அவளுக்கு தெரியாம தான் நான் இப்ப கூட்டிட்டு வந்து இருக்கேன் என்று சொல்ல புரியுதும்மா என்று சொல்லுகிறார். எங்க வீட்டுக்கு இருக்கிற ஒரே வாரிசு கிரிஷ் தான் அவனுக்கு நாங்க செய்ய வேண்டியதெல்லாம் செய்கிறோம் என்று சொல்ல அதெல்லாம் ஒன்னும் தேவை இல்ல என் பொண்ணு அதுக்கு எல்லாம் ஒத்துக்க மாட்டா என்று சொல்ல உடனே முத்து இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து வருகிறார் உடனே முத்து வர கிரிஷ் ஜாலியாக பேச உடனே க்ரிஷ் பாட்டி சமாளித்துவிட்டு கிரிஷ் அழைத்துச் சென்று விடுகிறார். பிறகு முத்து இவங்களை உங்களுக்கு தெரியுமா என்று கேட்க என்னோட தம்பி பையன் என்று சொல்ல முத்து யோசிக்கிறார் பிறகு அவர் நம்ப எல்லாமே நெருங்கிட்டே வரும் என்று கிரிஷ் பெரியப்பா சொல்லுகிறார். சரி நீங்க போய் சாமி கும்பிடுங்க என்ன சொல்லிவிட்டு முத்து யோசிக்கிறார்.
மறுபக்கம் மனோஜ்க்கு பாண்டிச்சேரியில் இருந்து பர்ஸ் வாங்கிட்டு வந்து கொடுக்கிறார். மறுபக்கம் ஸ்ருதி கரண்டிகளையும் செஃப் டிரஸ்யும் ரவிக்கு கொடுக்க இதெல்லாம் எனக்கு என்று கேட்க உனக்கு கொடுத்தா நீ என்ன உன்னோட ரெஸ்டாரன்ட் எப்ப நீத்து ரெஸ்டாரண்ட்ல தானே வெப்ப இது எனக்காக வாங்கிட்டு வந்தேன் என்று சொல்ல ரெண்டு மூணு நாள் நிம்மதியா இருந்தது என்று செல்ல ஸ்ருதி ரவியை கேள்வி கேட்கிறார். பிறகு இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட ரவி சும்மா சொன்னேன் உன்னை ரொம்ப மிஸ் பண்ணினேன் என்று சொல்லுகிறார்.
மறுபக்கம் முத்து வீட்டுக்கு வர குடும்பத்தினர் அனைவரும் வருகின்றனர் அம்மா எங்க அப்பா என்று கேட்க பாண்டிச்சேரியில் நடந்ததெல்லாம் பார்வதி கிட்ட சொல்லிட்டு அவளுக்கு ஒரு கிப்ட் வாங்குனதா சொல்லியிருந்தா அதை கொடுக்க தான் போயிருக்கா என்று சொல்ல சரி ஒரு முக்கியமான விஷயம் பேசணும் நான் மீனாவுக்கும் போன் பண்ணுகிறேன் என்று சொல்லி க்ரிஷ் பெரியப்பா பெரியம்மாவை சந்தித்த விஷயத்தை சொல்லுகிறார் அப்ப கிரிஷ்க்கு குடும்பம் இருக்கா என்று கேட்க அப்படித்தான் சொல்றாங்க விதியின்றது எல்லாத்தையும் ஒன்னு ஒன்னா நம்மளுக்கு காட்டிக்கிட்டு இருக்கு மீனா சொல்ற மாதிரி க்ரிஷ் பின்னாடி ஒரு கதை இருக்கு என்று சொல்லுகிறார்.
இதையெல்லாம் ரோகிணி கேட்டு அதிர்ச்சி அடைய பிறகு மனோஜ் எதுக்கு தேவை இல்லாம பேசிக்கிட்டு என்று சொல்லி ரோகிணியை அழைத்துச் சென்று விடுகிறார். பிறகு ரூமுக்கு வந்த ரோகிணி கிரிஷ் பாட்டிக்கு போன் போட்டு என்ன சொல்லுகிறார்? அதற்கு அவரின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.


