Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

முத்துவை மன்னிப்பு கேட்க சொன்ன சீதா, பதிலடி கொடுத்த மீனா, வெளியான சிறகடிக்க ஆசை ப்ரோமோ.!!

siragadikka asai serial promo update

அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார்.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் தற்போது முத்து செய்யப்பட்ட விஷயத்தால் அருணுக்கு சஸ்பெண்ட் கிடைக்கிறது.

இதனால் சீதாவிடம் அருண் கோபமாகவும் என் மீது எந்த தப்பும் இல்லை எல்லாத்துக்கும் காரணம் உன் மாமா தான் என்றும் கண்ணீர் விட்டு அழுகிறார். உடனே மீனா சந்திரா வீட்டில் இருக்க சீதாவும் வருகிறார். சஸ்பெண்ட் ஆயிருக்கிறது என்னோட புருஷன் அத செஞ்சது உன்னோட புருஷன் தானே என்று சொல்ல கொஞ்ச நாளைக்கு அமைதியா விட்டா எல்லாமே சரியாயிடும் என மீனா சொல்லுகிறார்.

மாமா மன்னிப்பு கேட்கணும் என சீதா சொல்ல கேட்க மாட்டாரு அவரே மன்னிப்பு கேட்கணும்னு நினைச்சாலும் நான் கேட்க விட மாட்டேன் என மீனா உறுதியாக சொல்லுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikka asai serial promo update

siragadikka asai serial promo update