Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கரூர் துயர சம்பவம்.. விஷால் மேனேஜர் உருக்கமான பதிவு.!!

Karur Tragedy.. actor Vishal's manager posted a touching post.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் தற்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி வருகிறார். ஏற்கனவே இரண்டு மாநாடுகள் முடிந்த நிலையில் தற்போது மாவட்டம் வாரியாக சென்று பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த நிலையில் நேற்று நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார் நாமக்கலில் முடித்துவிட்டு கரூரில் பிரச்சாரத்தை விஜய் தொடங்கியிருந்தார் இவரை காண பல்லாயிரம் கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர்.

கூட்டம் அதிகமாக இருந்ததால் நெரிசலில் சிக்கி 39 பேர் ப*யாகி இருப்பதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதில் 10 குழந்தைகளும் 16 பெண்களும் என தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் விஷாலின் மேனேஜரான ஹரிகிருஷ்ணன் அவர்கள் உருக்கமான பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார்.

அதில் கரூரில் நிகழ்ந்த துயர சம்பவம் என் மனதை மிகுந்த வேதனையில் ஆழ்த்தியுள்ளது. உயி*ழந்தவர்களின் ஆன்மா சாந்தி அடையட்டும் அவர்களை இழந்த அனைவரும் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல் மருத்துவமனையில் உள்ளவர்கள் மிக விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன் என்று பதிவிட்டுள்ளார்.