Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

யுவன் ஷங்கரை பாராட்டிய விஜய், என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க

thalapathy vijay about yuvan shankar raja

கோட் படத்தைப் பார்த்த விஜய் யுவன் சங்கர் ராஜாவை புகழ்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது கோட் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மேலும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம்,கல்பாத்தி எஸ் சுரேஷ் , கல்பாத்தி எஸ் கணேஷ்,ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ளது. ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு கோட் 25 ஆவது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, லைலா, யோகி பாபு, பார்வதி நாயர், விடிவி கணேஷ் போன்ற பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் இந்த படத்திற்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றன.

இந்தப் படத்திற்கான டிக்கட்டுகள் நேற்று ஒரே நாளில் 25 ஆயிரத்திற்கும் மேல் விற்கப்பட்டுள்ளதாகவும், இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ரீ புக்கிங் படமாக கோட் இருப்பதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில் தளபதி விஜய் படத்தை பார்த்துவிட்டு யுவன் சங்கர் ராஜாவை ஒரே வார்த்தையில்,”யுவன் பின்னிட்டார்ப்பா”என்று கூறியுள்ளார். இதனால் படக்குழு உற்சாகமடைந்துள்ளனர். மேலும் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பையும் அதிகரித்து வருகிறது.

thalapathy vijay about yuvan shankar raja