தமிழ் சின்னத்திரையில் மருதாணி என்ற சீரியல் நடித்து அறிமுகம் ஆனவர் நேத்ரன். இதை தொடர்ந்து பல்வேறு சீரியல்களில் நடித்த இவர் திரைப்படங்களிலும் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ளார்.
பெரும்பாலும் நெகட்டிவ் வேடத்தில் நடித்து வந்த நேத்திரன் கீதா என்ற சீரியல் நடிகையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அபிநயா மற்றும் அஞ்சனா என இரண்டு மகள்கள் உள்ளனர். அபிநயா விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியின் முதலாவது சீசனில் அப்பாவுடன் இணைந்து நடனம் ஆடினார்.
மகள் அஞ்சனா தற்போது திரைப்படம் ஒன்றில் நாயகி ஆக நடித்து வருகிறார். டாடா படத்தை இயக்கியவர் இந்த படத்தை இயக்கி வருகின்றார். மேலும் நேத்திரன் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவின் அண்ணனாக சந்துரு என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை நடந்து ஐசியூ-ல் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக அவரது மகள் அபிநயா கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
எல்லாம் முடிஞ்சு போச்சு இருந்தாலும் உங்களுடைய பிராத்தனை அப்பாவை காப்பாற்றும் என்ற நம்பிக்கையில் தான் இந்த வீடியோவை வெளியிடுவதாக அவர் தெரிவித்துள்ளார். நீங்கள் நேத்திரனுக்கு கல்லீரலில் பெரிய அளவில் பாதிப்பு இருப்பதாகவும் அபிநயா தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோவை பார்த்து ரசிகர்கள் நேத்ரன் கூடிய விரைவில் குணமடைந்து விட்டு திரும்ப வேண்டும் என பலரும் பிரார்த்தனை செய்து வருவதோடு அபிநயாவுக்கு ஆறுதல் கூறும் வருகின்றனர்.
View this post on Instagram

