தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக தீபாவளிக்கு விடாமுயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
அது மட்டுமின்றி அடுத்ததாக குட் பேட் அக்லி இன்று திரைப்படம் வெளியாக உள்ளது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது.
டைட்டிலுக்கு ஏற்றபடி போஸ்டரிலும் அஜித் மூன்று கெட்டப்பில் இருந்ததால் மூன்று வேடங்களில் நடிக்கிறார் என உறுதியானது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் செகண்ட் லுக் போஸ்டர் குடித்த அப்டேட் வெளியிட்டுள்ளது படக்குழு.
அதாவது, இன்று மாலை 6:40 மணிக்கு இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் தற்போதே சமூக வலைதளங்களில் ஆட்டத்தை தொடங்கியுள்ளனர்.


