Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரசிகரின் குழந்தையுடன் க்யூட்டாக வீடியோ காலில் பேசிய அஜித், வைரலாகும் ஃபோட்டோ

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லீ என இரண்டு திரைப்படங்கள் விறுவிறுப்பாக உருவாகி வருகின்றனர்.

விடாமுயற்சி திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் குட் பேட் அக்லி என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

அஜித் தனது ரசிகர் ஒருவரிடம் வீடியோ காலில் பேசி உள்ளார். அப்படியே ரசிகரின் குழந்தையும் ஹாய் அங்கிள் என பேச அஜித் ஹாய் டா கண்ணா என்று பதில் கூறியுள்ளார். அஜித் ரசிகருடன் வீடியோ காலில் பேசிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி லைக்குகளை குவித்து வருகின்றன.

Ajith video call to fan baby
Ajith video call to fan baby