Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கடைசி நாள் ஷூட்டிங்க்கு ரேஷ்மா வராததற்கு காரணம் என்ன தெரியுமா? வைரலாகும் தகவல்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ராதிகாவின் ரேடான் தயாரிப்பில் முதல் முறையாக ஒளிபரப்பாகிய சீரியல் கிழக்கு வாசல். எஸ்ஏ சந்திரசேகர் ஜானகி சுரேஷ் உட்பட பல இந்த சீரியலில் இணைந்து நடித்தனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக ரேஷ்மா நடித்தார். திடீரென ரேஷ்மா இந்த இந்த சீரியலில் காணாமல் போன நிலையில் அதை ஈடுகட்ட சீரியல் குழு என்னென்னவோ முயற்சி செய்தது. ஆனால் ரேட்டிங்கில் தொடர்ந்து சறுக்கத்தை சந்தித்து வந்த நிலையில் கடந்த சனிக்கிழமையுடன் இந்த சீரியல் மொத்தமாக முடிவுக்கு வந்தது. கடைசி நாள் ஷூட்டிங்கில் கூட ரேஷ்மா பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் கடந்த ஒரு மாதமாக உடல் நல குறைப்பாட்டால் பாதிக்கப்பட்டு இருப்பதால் சீரியலில் நடிக்க முடியவில்லை என ரேஷ்மா தெரிவித்துள்ளார். மேலும் கிழக்கு வாசல் சீரியல் அனுபவம் மறக்க முடியாதது எனவும் தெரிவித்துள்ளார்.

Reshma in kizhakku vaasal serial
Reshma in kizhakku vaasal serial