தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக இருந்து வரும் இந்த சீரியலில் மீனா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசிக்கிறார் பிரியா பாலகுமரன்.
இவர் தற்போது சிறகடிக்க ஆசை சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது மீனா சமைப்பது போல எடுக்கப்பட்ட காட்சியில் அவர் பூவை போட்டு கிளறிக் கொண்டிருப்பதை தான் சமையல் செய்தது போல சீரியலில் காட்டியுள்ளனர்.
மீனா வெளியிட்ட இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் இப்படித்தான் ஊரை ஏமாத்திரிங்களா என்று கிண்டல் அடித்து வருகின்றனர்.
View this post on Instagram

