Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கண் கலங்கி நிற்கும் ஈஸ்வரி. கதிரிடம் பேசிய தாரா. இன்றைய எதிர்நீச்சல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.

இந்த வீடியோவில் இன்னும் முளைக்கவே இல்லை அது எல்லாம் என்ன அதட்டுதுங்க என ஜான்சி ராணி விசாலாட்சியிடம் சொல்ல விசாலாட்சி அதுக்கு இப்ப என்னடி பண்ண சொல்ற என்று கேட்க ஜான்சி ராணி ஏதோ ஐடியா சொல்கிறார்.

அதைத்தொடர்ந்து ஒரு பக்கம் தர்ஷினி ஓரிடத்தில் அடைத்து வைக்கப்பட்டிருக்க மறுபக்கம் இப்ப எங்கன்னு போய் தேடுறது என ஈஸ்வரி கலங்கி நிற்க நந்தினி தர்ஷினி ஓட தான் வீட்டுக்கு போகணும் இல்லனா இப்படியே தேடிக்கிட்டு கிடப்போம் என சொல்கிறார்.

பிறகு தாரா கதிரிடம் இதை உன்கிட்ட தான் பா சொல்றேன் வேற யார்கிட்டயும் சொல்லவில்லை என்று ஒரு விஷயத்தை சொல்ல கதிர் மகளை தோலில் சாய்த்து கண் கலங்குகிறார்.

Ethir neechal serial episode update
Ethir neechal serial episode update