Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட பிக் பாஸ் காஜல் பசுபதி

bigg boss kaajal pasupati in second marriage

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் காஜல் பசுபதி. பல்வேறு படங்கள் நடித்துள்ள இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனிலும் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார்.

சாண்டி மாஸ்டரை காதலித்து ரிலேஷன்ஷிப்பில் இருந்த இவர் அதன் பிறகு அவரை பிரிந்து விட்டார். இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திருமண கோலத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு திடீர்னு முடிவாகிடுச்சு அதனால கல்யாணம் முடிஞ்சிடுச்சு. யாரையும் கூப்பிட முடியல என மன்னிப்பு கேட்டுள்ளார்.

ஆனால் மாப்பிள்ளை யார் என்பது குறித்த விஷயங்களை அவர் வெளியிடவில்லை.